‘இனிமேல் இத உடனே பண்ணுனா ரூ.5000 சன்மானம்’.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 28, 2019 12:49 PM
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து இன்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 2019-2020 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு சன்மானமாக ரூ.5000 வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் விவசாய தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும், மீன்பிடி தடைகாலமான 61 நாட்களுக்கு நிவாரணத் தொகை ரூ.5,500 -ல் இருந்து ரூ.6,500 -ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
Tags : #PUDUCHERRY #GOVERNMENT #ACCIDENT #PEOPLE #BUDGET