சுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Aug 29, 2019 05:45 PM

ஹரியானாவில் சுங்கச்சாவடி பெண் ஊழியரை காரில் வந்த ஒரு நபர் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

Haryana Woman slapped by a car driver in toll plaza

ஹரியானா மாநிலம் குருகிராமின் கெர்கி தவ்லா பகுதியில் இருக்கும் சுங்கச்சாவடி ஒன்றில் பெண் ஊழியர் ஒருவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த ஒரு நபர் கட்டணத்தை செலுத்தாமல் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த நபர் திடீரென அந்த பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணும் தாக்க முயற்சிக்க, அந்த நபர் தொடர்ந்து அவரைத் தாக்கியுள்ளார். பின்னர் அருகிலிருந்தவர்கள் அந்த நபரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள வீடியோவை அடிப்படையாகக் கொண்டு வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : #HARYANA #TOLL #WOMAN #CAR #SLAP #ATTACK #SHOCKING #VIRAL #VIDEO #CCTV