‘கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்’.. ‘நூலிழையில் உயிர்தப்பிய நபர்’ உறைய வைத்த சிசிடிவி காட்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Aug 27, 2019 10:04 PM

பாலம் திடீரென உடைந்து உள்வாங்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Bridge Collapses in Turkey caught on CCTV camera

துருக்கியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழையால்  நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெர்மே என்னும் நகரில் உள்ள பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பாலத்தில் சென்ற பாதசாரிகளுடன் கார் ஒன்றும் கீழே விழுந்துள்ளது.

பாலம் இடிவதற்கு சற்று முன்னர் அந்த இடத்தைக் கடந்து வந்த பாதசாரி ஒருவர் நடந்ததைக் கண்டு அதிர்ந்துபோய் நின்றுள்ளார். பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இருவர் காயங்களுடன் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : #ACCIDENT #CCTV #BRIDGE #TURKEY #BROKEN