'31 ஆயிரம் கோடி வருமானம்'... 'குளு குளு ஏசி'... 'புதிய 'லுக்'கிற்கு மாறிய 'எலைட்' ஊழியர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 31, 2019 03:21 PM

டாஸ்மாக் எலைட் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Employees of TASMAC Elite outlets get blazers

டாஸ்மாக் என அழைக்கப்படும் மாநில சந்தைப்படுத்துதல் கழக லிமிடெட், மாநிலம் முழுவதும் 83 எலைட் விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது. இதில் 31 விற்பனை நிலையங்கள் சென்னையில் அமைந்துள்ளன. இவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய பிளேஸர்கள் சீருடைகளாக வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய டாஸ்மாக் உயரதிகாரி ஒருவர்,'' சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் விற்பனை நிலைய ஊழியர்களுக்கு பிளேஸர்கள் சீருடைகளாக வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கு விரைவில் பிளேஸர்கள் வழங்கப்படும். மேலும் அனைத்து எலைட் விற்பனை நிலையங்களும் குளிரூட்டப்பட்டவை என்பதால் இந்த பிளேஸர்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என அந்த அதிகாரி தெரிவித்தார்.

பெரும்பாலான டாஸ்மாக் எலைட் விற்பனை நிலையங்கள் மால் மற்றும் உயர்நிலை இடங்களில் இருப்பதால், இந்த பிளேஸர்கள் தொழில் முறை தோற்றத்தை அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த 2018 - 2019ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் 31,157 கோடி ரூபாயை அரசு வருமானமாக ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #TASMAC ELITE #BLAZERS #ELITE OUTLETS