தோண்டும்போது வந்த ‘டமார் என்ற சத்தம்’.. ‘செப்புப் பாத்திரத்தைத் திறந்ததும்’.. உறைந்துபோய் நின்ற ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 27, 2020 11:23 AM

திருச்சியில் பிரசித்திபெற்ற திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் சுத்தம் செய்யும்போது கிலோக் கணக்கில் தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

golden treasure found in trichy thiruvanaikoil temple

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக சொல்லப்படுவதுதான், திருச்சியில் உள்ள சோழர் கால, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரி கோவில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு வெளிநாட்டில் இருந்தும் பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வதுண்டு.  இக்கோயிலில் உள்ள பிரசன்ன விநாயகர் சிலைக்கு பின்புறம் ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, குழிதோண்டினர். அப்போது டமார் என சத்தம் கேட்டது. முழுமையாகத் தோண்டியதில் அது ஒரு செப்புப் பாத்திரமாக உருத் துலங்கியது. அதைப் பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்.

ஆம், அதில்;  3.5 கிராம் முதல் 3.8 கிராம் வரையிலான எடைகொண்ட 504 தங்க நாணயங்களும், 10 கிராம் எடைகொண்ட ஒரு தங்க நாணயமும் என மொத்தம் 1715 கிலோ கிராம் எடைகொண்ட 505 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு தற்போது 61 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டதோடு, எந்த காலத்து புதையல் என்றும், இதன் உண்மையான மதிப்பு என்ன என்றும் தொல்லியல் துறை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதையல், திருச்சி ஸ்ரீரங்கம் தாசில்தார் முன்னிலையில் மாவட்ட வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags : #TRICHY #GOLDENTREASURE #THIRUVANAIKOIL