‘பணம் கேட்டு தொல்லை’!.. ‘விஷம் குடித்து பெண் தற்கொலை’.. போலீஸ் விசாரணையில் திருநங்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 04, 2019 03:15 PM

திருச்சி அருகே எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை செய்தது தொடர்பாக திருநங்கையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trichy woman suicide case transgender arrested

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயாகுமாரி. இவரின் வீட்டின் அருகே கிருஷ்ணமூர்த்தி என்ற திருநங்கை சோனாலி வசித்து வந்துள்ளார். சோனாலிக்கு விஜயாகுமாரி சித்தி முறை உறவுக்காரர் என கூறப்படுகிறது. சோனாலிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் திருநங்கை சோனாலி, விஜயாகுமாரியிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த விஜயாகுமாரி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் திருநங்கை சோனாலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #CRIME #SUICIDEATTEMPT #WOMAN #TRICHY #TRANSGENDER