‘யாரும் கடத்தல.. பெற்றோருடன் செல்ல விருப்பம்!’.. ‘சாதிமறுப்பு திருமணம் செய்த’ இளம் பெண் நேரில் ஆஜர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இளம் பெண், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இன்று காவல் நிலையத்தில் ஆஜரானதோடு தனது பெற்றோருடனேயே திரும்பி செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த கவுந்தபாடியைச் சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த போது காதலித்து வந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திராவிட கழகத்தைச் சேர்ந்த தலைமை செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரனின் உதவியோடு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது.
அதன் பின்னர் சாதி மறுப்பு திருமணம் செய்த இந்தத் தம்பதியரில் இளமதி கடத்தப்பட்டதாக செல்வன் தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன. ஆனால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட இளம்பெண் இளமதி சேலம் மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் தன் பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார் என்று அவர் தரப்பு வழக்கறிஞர் கூறியதை அடுத்து இளமதியை அவரது பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட போலீசாரால் முடிவு செய்யப்பட்டது.
