‘ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்க’!.. தோட்டத்திலிருந்து ஓடிவந்த பெண்கள்.. ‘இத வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது’..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 06, 2020 11:04 AM

திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு மணமக்கள் மாட்டுவண்டியில் வந்த செயல் பலரையும் கவர்ந்துள்ளது.

Coimbatore newly married couple traveling in bullock cart

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பரணி பிரகாஷ் (25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கோபி அருகே உள்ள கூகலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மகள் சுபாசினி (23). இவர் பிஎஸ்சி தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளார்.

இந்த நிலையில் பரணி பிரகாஷுக்கு, சுபாசினிக்கு கருங்கரடு அருகே முருகன் கோவிலில் நேற்று திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து கூகலூரில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமக்கள் தயாராகினர். அப்போது அவர்களை அழைத்துச் செல்ல மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் ஏறி அமர்ந்த மணமக்கள், உறவினர்களின் புடைசூழ சுமார் 10 கிலோமீட்டர் மாட்டுவண்டியில் மண்டபத்துக்கு சென்றனர். மாட்டுவண்டியில் மணமக்கள் செல்வதைப் பார்த்ததும் சாலையோரம் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் வேகமாக வந்த வண்டியை நிறுத்தி மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி வழியனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தெரிவித்த மணமக்கள், ‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புகையில்லா சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாட்டுவண்டியில் பயணம் செய்தோம். இது எங்களுக்கு புது அனுபவமாக இருந்ததுடன், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துவிட்டது’ என தெரிவித்தனர்.

Tags : #COIMBATORE #MARRIED #COUPLE #BULLOCKCART