'கொரோனா' அறிகுறியுடன் வந்த '4 பேர்'... 'சாப்பிட்டு' வருவதாக கூறி 'தப்பியோட்டம்'... 'போலீசார்' தீவிர தேடுதல் 'வேட்டை'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 14, 2020 11:05 PM

மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 5 பேர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona in Maharashtra-5 suspected patients escape Nagpur hospital

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக நவி மும்பை, தானே,நாக்பூர், பிம்ப்ரி சின்ச்வாட் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து தியேட்டர்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள் போன்றவை மார்ச் 30ம் தேதி வரை மூடப்படும் என முதலமைச்சர் உத்தவ்தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாக்பூரில் உள்ள மயோ என்ற மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதில் ஒருவருக்கு கொரோன இல்லை என ரிப்போர்ட் வந்தது.

இதையடுத்து மற்ற 4 பேருடைய மருத்தவ அறிக்கைக்காக மருத்தவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று நாக்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேரும் எவ்வித அறிவிப்பும் இன்றி தப்பியோடிவிட்டனர்.

நாக்பூர் தெஹ்சில் துணை ஆய்வாளர் சூர்யவன்ஷி கூறுகையில், "தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். நொறுக்குத்தீனி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் திரும்ப வரவில்லை. அவர்களை விரைவில் பிடித்து விடுவோம்" எனக் கூறினார்.

Tags : #MAHARASHTRA #NAGPUR #MAYO HOSPITAL #CORONA #SUSPECTED #ESCAPED