‘ஓடும் ரயிலில் திடீரென பற்றிய தீ’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Aug 29, 2019 01:39 PM

அரியானா மாநிலத்தில் சென்றுகொண்டிருந்த தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

WATCH: Fire breaks out in Telangana Express, Passengers safe

ஹைதராபாத்தில் இருந்து புது டெல்லிக்கு தெலுங்கானா எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தது. இன்று காலை 7 மணியளவில் அரியானா மாநிலம் அசோதி-பலப்கர் என்னும் ரயில் பாதையில் தெலுங்கானா எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் 9 -வது பெட்டியில் இருந்து திடீரென தீப்பிடித்து புகை கிளம்பியுள்ளது.

இதனால் உடனே ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை அடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த வழி தடத்தில் செல்லும் மற்ற ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : #FIREACCIDENT #TELANGANAEXPRESS #HARYANA #TRAIN #PASSENGERS