தொழிற்சாலையில்.. 'திடீரென' பற்றிய தீ...உடல்கருகி 19 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > உலகம்By Manjula | Sep 30, 2019 10:54 AM
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 19 பேர் உடல்கருகி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீன நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள நிங்காய் கவுண்டி என்னும் பகுதியில் தொழிற்பூங்கா ஒன்று உள்ளது.இங்கே வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மதியம் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையில் தீப்பற்றியவுடன் தொழிலாளர்கள் வேகமாக ஆலையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.என்றாலும் சிலர் உடனடியாக வெளியேற முடியாமல் உள்ளேயே மாட்டிக்கொண்டனர். .இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்து,அங்கிருந்த தொழிலாளர்களைக் காப்பாற்றினார்.
இதில் சுமார் 19 பேர் தீயில் இருந்து வெளியேற முடியாமல் உடல்கருகி பலியாகினர்.8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதில் 3 பேர் கடுமையான தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்டு இருப்பதால்,அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
