அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து..! குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Aug 06, 2019 09:33 AM
டெல்லி அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து உடனே 10 -க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளன. தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதால் அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடியுள்ளனர்.
இதனை அடுத்து பல மணிநேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 11 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Delhi Fire Service: 5 people dead & 11 injured in a fire that broke out in a multi-storey building in Zakir Nagar, late last night. pic.twitter.com/9ERr91u80i
— ANI (@ANI) August 6, 2019
