‘திடீரென பற்றி எரிந்த தீ’.. துடிதுடிக்க இறந்த 26 பள்ளி குழந்தைகள்..! நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Sep 19, 2019 01:13 PM

லிபெரியா நாட்டில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 Children, 2 Teachers killed in Liberia school fire accident

லிபேரியா நாட்டின் தலைநகர் மன்ரோவியாவில் மசூதியுடன் இணைந்த பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் தங்கி பயின்று வந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அந்நாட்டு தீயணப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே தீ விபத்து நடந்த பள்ளியை அந்நாட்டு அதிபர் பார்வையிட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் இறந்த 26 குழந்தைகளில் சிலர் 10 வயதுக்கும் கீழானவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தீ விபத்தில் பள்ளிக்குழந்தைகள் பரிதாமபாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #LIBERIA #SCHOOL #FIREACCIDENT #CHILDREN #KILLED #TEACHERS