‘இந்திய கிரிக்கெட் வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து’.. ஜன்னலை உடைத்து மனைவி, குழந்தையை மீட்ட தீயணைப்பு படையினர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 25, 2019 11:56 AM

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Fire breaks out at Cricketer S Sreesanth\'s house in Kochi

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டின் முதல் தளத்தில் மனைவி, குழந்தை மற்றும் பணியாட்கள் தங்கி இருந்துள்ளனர். அப்போது வீட்டில் ஸ்ரீசாந்த் இல்லை எனக் கூறப்படுகிறது. அதிகாலை வேளையில் வீட்டின் தரைதளத்தில்  திடீரென தீ பற்றியுள்ளது. இதனால் முதல் தளத்தில் தங்கி இருந்த ஸ்ரீசாந்தின் மனைவி, குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். பின்னர் அனைவரும் உதவி கேட்டு கூச்சல் போட்டுள்ளனர்.

அப்போது கூச்சல் சத்ததைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை உடைத்து வீட்டினுள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை அடுத்து தீயை அணைக்கு முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #FIREACCIDENT #SREESANTH #CRICKET #HOUSE #KOCHI