‘பதநீர் இறக்க பனைமரத்தில் ஏறிய விவசாயி’.. ‘திடீரென அறுந்த கயிறு’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 13, 2020 04:41 PM

பனை மரத்தில் பதநீர் இறக்க ஏறியபோது கயிறு அறுந்ததால் கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Farmer killed by falling from Palm tree near Uthangarai

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகே உள்ள வெள்ளையம்பதியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி என்ற சென்னன் (38). இவரது மனைவி சகுந்தலா (30). இவர்களுக்கு விஜயபிரியா (9), சர்மா (7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னன் அப்பகுதியில் பனைமரம் ஏறி பதநீர் இறக்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் படதாசம்பட்டி அருகே உள்ள பனந்தோப்பில் பதநீர் இறக்குவதற்காக பனைமரம் ஒன்றில் சென்னன் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்துள்ளது. இதனால் சுமார் 50 அடி உயரமுள்ள பனைமரத்தில் இருந்து சென்னன் கீழே விழுந்துள்ளார். பனைமரத்தின் அருகே கற்கள் இருந்ததால் கீழே விழுந்த சென்னனுக்கு பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சென்னனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக மருத்துவமனைக்கு அனுப்புயுள்ளனர். பதநீர் இறக்க பனைமரத்தில் ஏறிய விவசாயி கயிறு அறுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KILLED #FARMER #KRISHNAGIRI #DIES #PALMTREE