ரன் எடுக்க ஓடும்போது மயங்கி விழுந்த ‘இளம்வீரர்’.. டாக்டர் கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்.. அதிர்ச்சியில் உறைந்த சக வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரன் எடுக்க ஓடியபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![18 year old cricketer collapses during match, dies in Odisha 18 year old cricketer collapses during match, dies in Odisha](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/18-year-old-cricketer-collapses-during-match-dies-in-odisha.jpg)
ஒடிஷா மாநிலம் கேண்ட்ரபரா (Kendrapara) மாவட்டத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 12ம் வகுப்பு படித்த பள்ளி மாணவர் சத்யஜித் ப்ரதன் (18) என்பவர் பேட்டிங் செய்துள்ளார். எதிர் முனையில் ( Non-striker) இருந்து ரன் எடுக்க ஓடியபோது சத்யஜித் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சத்யஜித்தை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளைஞர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சக வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)