'பாக்க மாடல் போல இருக்கும் இந்த 'சுதேஷ்' யாரு'?... 'டைரியில் இருந்த வார்த்தைகள்'... உறைந்து நின்ற போலீசார்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Feb 04, 2020 01:50 PM

பார்ப்பதற்கு மாடல் போல இருக்கும் இந்த இளைஞர் வைத்திருந்த டைரியை பார்த்து தான், காவல்துறையே கதிகலங்கி நிற்கிறது.

Streatham suspect Sudesh Amman life goal was carryout Terror Attack

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மீது இளைஞர் ஒருவர் திடீரென தாக்குதல் நடத்தினார். அவர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் அங்கிருந்த பொதுமக்களை தாக்கினான். இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞரை சுட்டு கொன்றனர்.

இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் ஒரு பயங்கரவாதி என்ற அதிர்ச்சி தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளார்கள். அந்த நபரின் பெயர் சுதேஷ் மமூர் பரஸ் அம்மான் என்றும், 20 வயதான அந்த இளைஞர், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இவன், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட தீவிரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான்.  இதற்காக கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவனுக்கு 3 ஆண்டுகள் 4 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவன் கடந்த மாதம் பரோலில் வெளி வந்துள்ளான். இதற்கிடையே சுதேஷ் வீட்டில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் தன்னுடைய வாழ்க்கையின் லட்சியமாக சுதேஷ் எழுதியிருந்த வரிகள் காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அதில்,

  • கடவுளுக்காக உயிரை விடுவது
  • சொர்க்கத்திற்கு செல்வது
  • சொர்க்கத்தில் உள்ள சகோதர, சகோதரிகளுடன் பார்ட்டி கொண்டாடுவது

என தன்னுடைய டைரியில் சுதேஷ் எழுதி வைத்துள்ளார். இதனிடையே தன்னுடைய குடும்பத்தினர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் குழுவில் அல்கொய்தா குறித்து சுதேஷ் பிரச்சாரம் செய்து வந்ததாக அவர் மீது குற்றசாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #ATTACKED #KILLED #SUDESH AMMAN #STREATHAM ATTACK #TERROR ATTACK #LONDON #KNIFE