"மகனை கடத்தியுள்ளதாக ஃபேஸ்புக் மூலம்"... "பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!"... "மிரண்டு போன போலீஸ்!"...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Jan 30, 2020 04:39 PM

தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடி, தன் பெற்றோரிடமே சிறுவன் பேரம் பேசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

class 12 student fakes kidnapping and asks ransom from parents

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஸ்வயம் குமார் என்ற 12ம் வகுப்பு படிக்கும் மாணவர், ஜனவரி 24ம் தேதி காணாமல் போயுள்ளார். பள்ளிக்கூடத்துக்குச் செல்வதாகக் கூறி காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுவன் அதன் பின் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், ஃபேஸ்புக் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு, அந்த சிறுவனை விடுவிக்கப் பணம் கேட்டு, ஒரு மர்ம நபர் மிரட்டியுள்ளார். பதறிப்போன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்த நபரை, செல்போன் சிக்னல் மூலம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அப்போது, சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனை மீட்கச் சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சிறுவனை யாரும் கடத்தவில்லை, பெற்றோருக்கு பயந்து தன்னை யாரோ கடத்தியுள்ளது போல் நாடகமாடியதை சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

அது குறித்து விவரிக்கையில், தான் பள்ளிக்குச் செல்லாமல், ஊர் சுற்றி பொழுதைக் கழித்தது பெற்றோருக்குத் தெரிந்தால், அவர்கள் திட்டுவார்கள் என பயந்து இவ்வாறு செய்ததாகக் காவல் துறையிடம் கூறியுள்ளார்.

பின்னர், அந்த சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய போலீஸார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags : #KIDNAPPING #FAKE #RANSOM