'கொரோனா' பெயரில் 'கம்ப்யூட்டர்' வைரஸ்... 'தகவல்களை' திருட காத்திருக்கும் 'கும்பல்'... 'நோ ஷேர்', பாஸ்வேர்ட், பாஸ்கோட், ஓடிபி...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Mar 11, 2020 12:41 PM

கொரோனா குறித்த தகவல்களுடனும், தலைப்புகளுடனும் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் உடனான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Fake e-mails in the name of corona virus-WHO Warning

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூகவலைதளங்கள், டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு செயலிகள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  மக்களிடம் நிலவும் கொரோனா  அச்சுறுத்தலை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களைக் குறிவைத்து கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடந்துவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஜப்பான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாதங்களில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்களின் முக்கிய தகவல்களும் திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில் போலியான மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம் என்றும், பாஸ்வேர்டு, பாஸ்கோட், ஓடிபி, உள்ளிட்ட எந்த விவரங்களையும் எங்கள் அமைப்பு கேட்பது கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : #CORONA #EMAIL #FAKE #WHO