'மீட் பண்ணனுமா?'.. 'ரூ.18 லட்சம் இழந்த நபர்.. 23 பெண்கள் கைது'.. அதிரவைத்த 'போலி டேட்டிங் வெப்சைட்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 29, 2019 02:21 PM
ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் இளைஞர் ஒருவர், போலி டேட்டிங் இணையதளம் மூலம் 18 லட்ச ரூபாய் இழந்ததை அடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட 23 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவில் போலி டேட்டிங் இணையதளத்தில் இளைஞர் ஒருவர் பெண்களின் நட்பு கிடைக்கும் என நினைத்து பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு 4 லட்சம் ரூபாய் முதன்மை டெப்பாசிட் பணமாக கட்ட வேண்டும் என்றும் பின்னர் அந்த பணம் திருப்பித் தரப்படும் என்றும் போன் செய்து பேசினர்.
அந்த இளைஞரும் இதனை நம்பி, 4 லட்சம் ரூபாய் செலுத்த, இப்படியே 18 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பின்னர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சைபர் க்ரைம் போலிஸார் விசாரணை செய்ததில் கொல்கத்தாவைச் சேர்ந்த மோசடி கும்பல் ஒன்று இப்படி ஒரு போலி டேட்டிங் இணையதளத்தை உருவாக்கி, தங்களிடம் சிக்குபவர்களிடம் போலி வாட்ஸ்-ஆப் ஐடிக்கள் மூலம் பேசி பணத்தைக் கறந்து வந்தது தெரியவந்துள்ளது.
இதற்கென 3 ஆண்கள் மற்றும் 23 பெண்கள் என மொத்தம் 26 பேர் கொண்ட கும்பல் 50 போன்கள், 3 லேப்டாப்களைக் கொண்டு இயங்கி வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆபரேஷனில் ஆந்திர போலீஸுக்கு கொல்கத்தா போலீஸ் உதவியது குறிப்பிடத்தக்கது.
