5 வழித்தடங்களில் 'குளுகுளு' ஏசியுடன்... அறிமுகமாகவுள்ள 'மெட்ரோ' ரெயில்... எந்த 'மாவட்டம்னு' தெரிஞ்சா கண்டிப்பா 'சர்ப்ரைஸ்' ஆவீங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 19, 2020 06:39 PM

சென்னையை இணைக்கும் மெட்ரோ ரெயில் அடுத்ததாக கோவை மாவட்டத்தில் அறிமுகமாக உள்ளது.

Metro Rail next to be Introduced on Coimbatore District

அதிவேகம், குளுகுளு ஏசி போன்ற காரணங்களால் கட்டணம் கையைக் கடித்தாலும் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்த சென்னை மக்கள் பலரும் விரும்புகின்றனர். அதற்கேற்றவாறு மெட்ரோ நிர்வாகமும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து கோவையிலும் விரைவில் மெட்ரோ ரெயில் அறிமுகமாகவிருக்கிறது. இதனையடுத்து சென்னை மெட்ரோ ரெயில்வே லிமிடெட்(சி.எம்.ஆர்.எல்.) கோவையில் எந்த வழிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவது என்று ஆய்வு செய்து வருகிறது.

அதன்படி கீழ்க்கண்ட 5 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

1. உக்கடத்தில் இருந்து கணியூர் வரை 24 கிலோ மீட்டர் தூரம். 2. உக்கடத்தில் இருந்து காரமடை அருகே உள்ள பிளிச்சிவரை 24 கிலோ மீட்டர் தூரம். 3. தண்ணீர் பந்தல், தடாகம் ரோடு, காரணம்பேட்டைவரை 42 கிலோமீட்டர் தூரம். 4.காருண்யா நகர் முதல் கணேஷ்புரம் வரை 44 கிலோ மீட்டர் தூரம். 5. வெள்ளலூரில் அமைய உள்ள புதிய பஸ்நிலையம் முதல் உக்கடம் வரை 11 கிலோ மீட்டர் தூரம்.

இது மட்டுமின்றி பெரியநாயக்கன்பாளையம் பிரஸ்காலனி, பீளமேடு சின்னியம்பாளையம் ஆகிய 2 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் பாதை மற்றும் ரெயில்நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

 

Tags : #TRAIN #METRO