‘போர் அடிக்காமா இருக்க’... இனி ரயில் பயணத்திலும் சினிமா, இசை நிகழ்ச்சிகள் பார்க்கலாம்... புறநகர் ரயில்கள் உள்பட... ரயில்வே நிர்வாகத்தின் புதிய வசதி!
முகப்பு > செய்திகள் > வணிகம்புறநகர் ரயில்கள் உள்பட பல ரயில்களில் திரைப்படங்கள், இசை, கல்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சிறிய தூரம் முதல் தொலை தூரம் பயணம் வரை மக்களால் பெரிதும் விரும்பப்படுவது ரயில் பயணம். இத்தகைய ரயில் பயணத்தில் பயணிகளை கவரும் புதிய முயற்சியை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது. அதன்படி, அனைத்து ரயில்களிலும் வைஃபை வசதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணத்தின் போது தங்களுக்கு விருப்பமான சினிமா, பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், பல்வேறு டி.வி. நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் ஒளிபரப்பப்படவுள்ளன.
இலவசமாகவும் கட்டண அடிப்படையிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளன. வைஃபை வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் தாங்கள் செல்லும் ஊர்களில் கார் பஸ் ரயில்களுக்கான முன்பதிவு வசதிகளையும் ரயில்களில் பயணிக்கும்போதே செய்து கொள்ளலாம். இதைத் தவிர ரயில்களில் மக்களுக்கு தேவையான தகவல்கள் அளிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது.
பிரிமியம் ரயில்கள், விரைவு ரயில்கள், மெயில்களில் மட்டுமன்றி புறநகர் ரயில்களிலும் 2022-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த பொறுப்பை ஏற்றுள்ள ரயில் டெல் நிறுவனம் சேவையை வழங்க ஜீ என்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான மார்கோ நெட்வொர்க் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.