'சாமி' தானப்பா 'கும்பிட்டோம்'... உடனே 'சிவனுக்கு' கோயில் கட்டிட்டோம்னு 'கிளப்பி' விட்டீங்களே... புலம்பும் 'ஐ.ஆர்.சி.டி.சி'
முகப்பு > செய்திகள் > இந்தியாகாசி-மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை என ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது.

வாரணாசி, உஜ்ஜையினி மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில் சிவனுக்காக தனி இருக்கை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில் ரயிலில் சிவனுக்கு என்று படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது. ரயிலின் தொடக்க ஓட்டத்தின் போது, பூஜை செய்வதற்காக மட்டுமே சிவன் புகைப்படம் வைக்கப்பட்டது என்றும் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் ஆன்மீக ஸ்தலங்களுக்கு இயக்கப்படுவதால் குறைவான சத்தத்தில் சாமி பாடல்கள், பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி வகுப்புகள் என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
