செம ஷாக்! 'அடுத்த' 2 நாளைக்கு... 'இந்த' ஸ்டேஷன்லாம் 'ட்ரெயின்' நிக்காதாம்... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பராமரிப்பு பணிகள் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (பிப்ரவரி 11-12) கீழ்க்கண்ட இடங்களில் எலெட்ரிக் ட்ரெயின்கள் நின்று செல்லாது என ரெயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்ட்ரல் தொடங்கி அரக்கோணம் வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் எலெட்ரிக் ட்ரெயின்கள் நிற்காமல் செல்லவிருக்கிறது. எந்தெந்த ஸ்டேஷன்களில் ட்ரெயின்கள் நின்று செல்லாது என்பதை கீழே பார்க்கலாம்.

1. 11-ம் தேதி இரவு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்படும் ரெயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், இந்து காலேஜ், பட்டாபிராம் ரெயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லாது.
2. 12-ம் தேதி அதிகாலை 12.15 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அன்னனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது.
3. 12-ம் தேதி காலை 1.20 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் ரெயில் கொரட்டூர், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், இந்து காலேஜ், பட்டாபிராம் ரெயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லாது.
