'மேக்-அப் ரூம்க்கு போன என்ஜினியர் மாப்பிள்ளை'.. 'திருமணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக'.. நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Nov 11, 2019 09:45 AM

திருமணம் நடக்கவிருந்த அரை மணி நேரத்துக்கு முன்பாக இளம் மென்பொருள் என்ஜினியர் ஒருவர், திருமண மண்டபத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

software Engineer hangs himself minutes before his wedding

ஹைதராபாத்தின் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கொம்பல்லி திருமண மஹாலில், திருமணம் செய்துகொள்ளப் போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, இளம் மாப்பிள்ளையும் சாஃப்ட்வேர் என்ஜினியருமான சந்தீப் மேக்-அப் அறைக்குள் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவாரென மொத்த குடும்பமும் காத்திருக்க, சந்தீப் இன்னும் அறையை விட்டு வெளிவராதது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனே போய் அந்த அறைக்கதவை அனைவரும் தட்டிப் பார்த்துள்ளனர். சந்தீப் கதவைத் திறக்காததால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாப்பிள்ளை சந்தீப் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து திருமணத்துக்கு வந்த அனைவருமே அதிர்ந்துள்ளனர்.

சந்தீப்பின் தற்கொலைக்கான காரணம் சரிவர தெரியவில்லை என்கிற சூழலில், பெட் பஷீர்பாத் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

NOTE: Suicide is never an option for any problem. For people struggling from suicidal thoughts, here is a helpline of Sneha (Suicide Prevention) Centre - 044 2464 0050.

Tags : #SUICIDEATTEMPT #HYDERABAD #ENGINEER #GROOM #WEDDING