ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகையான திரிணாமுல் எம்பி..! தூக்கமாத்திரை சாப்பிட்டாரா..? வெளியான காரணம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Nov 19, 2019 09:58 AM

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியும், நடிகையுமான நுஷ்ரத் ஜஹான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

TMC MP Nusrat Jahan discharged from ICU, Family dismisses rumours

நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பிரபல வங்காள நடிகை நுஷ்ரத் ஜஹான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை அடுத்து தனது காதலர் நிகில் ஜெயின் என்பவரை கடந்த ஜூன் மாதம் துருக்கியில் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கணவர் ஜெயினின் பிறந்தநாளை நுஷ்ரத் கொண்டாடினார். அன்று இரவு அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென அனுமதிக்கப்பட்டார். அளவுக்கு அதிகமான தூக்கமாத்திரை சாப்பிட்டதால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த நுஷ்ரத்தின் குடும்பத்தினர், ‘நுஷ்ரத்துக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது. ஞாயிற்றுக்கிழமை சுவாச பிரச்சனை தீவரமானதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். அவர் தூக்கமாத்திரை ஏதும் சாப்பிடவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். இப்போது அவர் நலமாக இருக்கிறார்’ என தெரிவித்துள்ளனர்.

Tags : #NUSRATJAHAN #TMC #MP #RUMOURS