'நவீன நரகாசுரர்களை அழிப்பது நீங்கதான்!'.. ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி பிரதமர் மோடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Oct 27, 2019 05:51 PM
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றதன் பிறகு நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் தீபாவளியை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
அவ்வகையில் இந்த வருடமும் இந்திய எல்லையில் நின்று வேற்று நாட்டு ராணுவ வீரர்களுடனும், ஊடுருவுவாதிகளுடனும் சண்டையிட்டு துணைக்கண்டத்தை ஆபத்தில் இருந்து காக்கும் பொருட்டு பணியாற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இனிப்பை பகிர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளார்.
அக்டோபர் 10-ஆம் தேதி தமிழீழத்துக்கு இந்திய அமைதிப்படைப் பிரிவு அனுப்பப் பட்டது போலவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியாக இந்தியாவால் சுட்டப்படும் காஷ்மீரைக் கைப்பற்றுவதற்கு அக்டோபர் 27-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் படைப்பிரிவு அனுப்பப் பட்டது.
இன்பாண்டரி நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்த நாள், இம்முறை தீபாவளி நாளன்று சேர்ந்து வந்துவிட்டது. இதனைக் கொண்டாடும் விதமாக, காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். அதற்கு முன்னதாக பாகிஸ்தானுடனான தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.