நண்பர்களே செய்த படுபாதக செயல்... சடலமாக மீட்க்கப்பட்ட வாலிபர்!... நொறுங்கிப் போன குடும்பம்!... கடலூரில் பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாலிபர் ஒருவர் மாயமான வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் கே.வி.ரெட்டி தெருவை சேர்ந்தவர் தினேஷ் பெஞ்சமின். இவருடைய மகன் ஜெய்வின் ஜோசப், கடலூரில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஜெய்வின் ஜோசப்பின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் மூலம், அவரது நண்பர்களான விஜய் மற்றும் ஞானசேகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெய்வேலி மற்றும் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 5 பேருடன் சேர்ந்து ஜெய்வின் ஜோசப்பின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை உப்பனாறு அருகே புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.
பின்னர், ஜெய்வின் ஜோசப்பின் உடலை புதைத்த இடத்தை தோண்டி, உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்தனர். அதன் பிறகு, மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே மீண்டும் உடலை அடக்கம் செய்தனர்.
மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நெய்வேலியை சேர்ந்த 2 பேர், காரைக்காட்டை சேர்ந்த 2 பேர், ஈச்சங்காட்டை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
