மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ... இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு ... முதியவருக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 11, 2020 06:32 PM

மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Court punishes an old man who raped a mentally challenged girl

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளே மேல்குமாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (63). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதித்த சிறுமியின் வீட்டிற்கு பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அந்த சிறுமியின் இரண்டு தம்பிகளிடமும் உங்கள் அக்காவுக்கு வைத்தியம் பார்க்க போகிறேன் நீங்கள் வெளியில் செல்லுங்கள் என கூறி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.

சிறுமியின் சத்தம் கேட்டு வந்த நிலையில் அன்பழகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். போலீசாரிடம் புகாரளித்ததன் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் அன்பழகனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இவ்வழக்கின் அனைத்து விசாரணைகளும் நடந்து முடிந்துள்ளன.

குற்றம் நீரூபிக்கப்பட்டதையடுத்து அன்பழகனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டாயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : #CUDDALORE #SEXUAL ABUSE