கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்தவொரு தளர்வும் இல்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல திரு.வி.க.நகரில் 39 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 31 பேருக்கும், அண்ணாநகரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/hRvoyRyrNe
— Greater Chennai Corporation (@chennaicorp) April 21, 2020
தண்டையார்பேட்டையில் 37 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும், திருவொற்றியூரில் 9 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் பாதிப்பு உள்ளது. மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
சென்னையில் இதுவரை கொரோனாவால் 303 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
