திடீர்னு எப்டி 'இத்தனை' பேருக்கு கொரோனா வந்துச்சு?... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Apr 21, 2020 01:41 AM

இந்தியளவில் கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. அங்குள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களில் 30 பேருக்கு எப்படி கொரோனா வந்தது? என்பதை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

Source of 30 COVID-19 cases in Vijayawada not traced yet

இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டர் இம்தியாஸ் மற்றும் போலீஸ் கமிஷனர் திருமலை ராவ் , ''பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா எப்படி வந்தது என்பது தொடர்பான தகவல்களைச் சேகரித்தோம். அப்போது, பாதிக்கப்பட்டவர்களில் 35 பேருக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், டெல்லி சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்தது.

ஆனால் 30 பேருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பதை கண்டறிய முடியவில்லை. அவர்களிடம் பேசுகையில் தாங்கள் எங்கும் செல்லவில்லை என்று கூறுகின்றனர். எனவே இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததே காரணம் என்று நினைக்கிறோம். வெளியில் செல்லவில்லை என்றாலும் அக்கம், பக்கத்தினருடன் நெருங்கி பழகி இருப்பார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது,'' என்று தெரிவித்து இருக்கின்றனர்.