'மெட்ரோ ரயில்ல செய்ற காரியமா இது?'.. இளைஞரின் விநோதமான செயலால் அதிர்ந்த சக பயணிகள்!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Siva Sankar | Sep 10, 2019 11:06 AM

இங்கிலாந்தின் மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் துணி துவைத்து காயப்போட்ட சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

young man washed cloths in London metro Rail goes viral

அவசர காலத்தில் செல்லக்கூடிய விரைவு பயணிகள் ரயிலான லண்டன் மெட்ரோ ரயில் ஒன்றில், பலரும் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ஒருவர் ஆயாசமாக துணிகளை எடுத்து, தான் எடுத்து வந்திருந்த பாட்டில் நீரை பக்கெட்டில் ஊற்றி, சோப்பு நீரை கலந்துள்ளார்.

இந்த காட்சியைப் பார்த்ததுமே பலருக்கும், இவர் என்ன செய்கிறார்? என கதிகலங்கியுள்ளது. ஆனாலும் மேற்கொண்டு அந்த இளைஞர், துணியைத் துவைத்து கசக்கிப் பிழிந்தார். இதையும் அருகில் இருந்தவர்கள் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்துள்ளனர்.

ஆனால் யார் தன்னைக் கவனிப்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத அந்த இளைஞர், தான் எடுத்து வந்திருந்த கம்பியை விரித்து,அதில் துணிகளைக் காயப்போட்டுவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். அவரின் இந்த செய்கை அங்கு கூடியிருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.

Tags : #METRO #RAIL #YOUNGSTER #DRESS