‘கொடூர கொரோனா: சென்னையில் இருந்து புறப்படும் 10 விமானங்கள் அதிரடியாக ரத்து!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் முக்கியமான விமான நிலையமான சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு 59 பன்னாட்டு வாகனங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்காக சென்னை வரும் பயணிகளில் பலருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படுத்தப்படுகிறது. இதற்காக 15 மருத்துவ குழுக்கள் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதாக சந்தேகம் இருந்தால் கூட மருத்துவ குழு அவர்களுக்கு சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவர்களுக்கு நோய் போன்ற பாதிப்புகளும் இருந்தால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மருத்துவ பரிசோதனை மட்டுமன்று சென்னை விமான பயணிகளின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
தவிர பயணிகள் கைவைக்கும் இடங்களான கைப்பிடிகள், கழிவறை குழாய்கள், எஸ்கலேட்டர்கள், பெட்டிகளை வைத்து எடுத்துச் செல்லும் டிராலிகள் உள்ளிட்ட அனைத்தும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து குவைத், ஹாங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர்இந்தியா, இண்டிகோ குவைத் ஏர்வேஸ், கதே பசுபிக் நிறுவனங்களின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் வருகை குறைவானதை அடுத்து இந்த நடவடிக்கையை இந்த விமான நிறுவனங்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.
