‘கை மாறும் பணத்தால்’... ‘கொரோனா வைரஸ் பரவுமா?... உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Sangeetha | Mar 09, 2020 10:44 AM

ஒருவரிடமிருந்து கைக்கு கை மாறும் பணத்தால் கொரோனா வைரஸ் பரவுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் சில விஷயங்களை அறிவுறுத்தியுள்ளது.

Can Currency notes Cause and spread novel Coronavirus?

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தாலிக்கு பெற்றோருடன் சென்று வந்த கேரளாவைச் சேர்ந்த 3 வயது குழந்தை உள்பட 41 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று நோய் பெரும்பாலும் சளி ,இருமல், தும்மல், வழியாகப் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் முகக் கவசங்களுக்கு உலக அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில், கைகள் வழியாகத்தான் தொற்று பரவுகிறது என்பதால் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அண்மையில் உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்ட்டிராவில் 10, 100, 500 ரூபாய் நோட்டுகளை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் 96 ரூபாய் நோட்டுகள், 48 நாணயங்களில் பாக்டீரியா, பங்கஸ் , பாரசைட் போன்ற தொற்றுகளின் கூறுகள் காணப்பட்டன. இதே போன்று நியயூயார்க் பல்கலைக்கழகம் 2014-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் 3 ஆயிரம் வகையான பாக்டீரியாக்கள் டாலர் நோட்டுகளில் படர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பீதி பரவிய நிலையில் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆசியாவில் இருந்து பெறப்படும் டாலர் நோட்டுகளை தனியாக வைத்து அவற்றை சோதித்த பின்னரே மறு சுழற்சிக்கு வெளியே அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இது குறித்த எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை என்ற போதும் வங்கிகளில் இருந்து ரொக்கப் பணத்தைக் கையாளும்போது கைகளைக் கழுவிக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக அழுக்குப்படிந்த கரன்சி நோட்டுகளையோ, காய்ச்சல் போன்ற அறிகுறி உடையவர்கள் பயன்படுத்தும் பணத்தை பரிமாற்றிக் கொள்வதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதால் ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பணத்தை தொட்ட கைகளால் முகங்களையோ சுவாச பகுதியையோ தொடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய பொருட்களை தொடும் போதும் அதீத கவனத்துடனேயே செயல்பட வேண்டும் எனவும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : #WHO #CURRENCY #RUPEES #CORONAVIRUS