‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’.. ‘சிக்கிய லேப்டாப்’.. பொள்ளாச்சி போல் உலுக்கிய மற்றொரு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Jan 31, 2020 12:57 PM

அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக 182 பெண்களை மிரட்டி பணம் பறித்த இரண்டு பிரபல தொழில் நிறுவன குடும்ப உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Kolkata business families arrested for filming 182 women

மேற்கு வங்கத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த வழக்கை கொல்கத்தா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகா மற்றும் பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் பிரபல நிறுவனத்தை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முதலில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகுகின்றனர். பின்னர் அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு நெருக்கமாக பழகுகின்றனர். அப்போது அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்கின்றனர்.

அதன்பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம், வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர். இதேபோல் 182 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொல்கத்தா போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொணடனர்.

இந்த நிலையில் இந்த சம்பவங்களுக்கு உடைந்தையாக இருந்த கைலாஷ் யாதவ் என்பவரை போலீசார் கடந்த 10ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையை அடுத்து அனீஷ் லோஹரூகா மற்றும் ஆதித்ய அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த லேப்டாப் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கடந்த வருடம் பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வைத்து பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #POLICE #KOLKATA #FILMING #WOMEN