நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ், "என்னுடைய கல்யாணத்தை கூட என் குடும்பத்தாரை பார்க்கவிடாமல் செய்து விட்டது" சீன மணப்பெண் உருகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

சீனாவை சேர்ந்த ஜியாக்கி என்ற பெண்ணும், இந்தியரான பிண்டு என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். தற்போது அவர்களின் காதல் வாழ்க்கை, கல்யாணத்தில் முடிய இந்தியாவில் திருமண ஏற்பாடு நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக 05.02.2020 புதன்கிழமை அன்று மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூரில் திருமணம் பெற்றோர்களால் நடத்தப்பட்டது.
ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் இந்தியா - சீனா இடையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திருமணத்தில் சீனப் பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை. இதனால் சோகமடைந்த மணப்பெண் ஜியாக்கி, நிலைமை சீரான பின்னர் கணவருடன் சீனா செல்ல இருப்பதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாச மருமகனான பிண்டு தன் காதல் மனைவியின் சந்தோஷத்திற்காக மற்றுமொரு திருமண வரவேற்பு விழாவை சீனாவில் நடத்த போவதாக கூறியுள்ளார்.
