‘சரிதா நாயருக்கு’ 3 வருடம் சிறைதண்டனை!.. 'கூடவே அபராதத் தொகை'.. கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Oct 31, 2019 04:08 PM
கேரள நடிகை சரிதா நாயருக்கு அளித்து கோவை 6வது குற்றவியல் நீதிமன்றம் 3 வருட சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கோவை வடவள்ளியில் சோலார் பேனல் நிறுவனம் நடத்தி வந்த சரிதா நாயர் கோவைமற்றும் நீலகிரியை பகுதிகளில் காற்றாலை அமைத்து தருவதாகக் கூறி வடவள்ளியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் 28 லட்சம் ரூபாயும், ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ராமன் ஜோயோ உள்ளிட்டோரிடம் 5 1/2 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் புகார் வழக்கில் நடிகை சரிதா நாயர், அவருடைய முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேனேஜர் ரவி ஆகியோர் மீது கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின் அவ்வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட பிறகு இன்று (அக்டோபர் 31, 2019) பிற்பகல் 3.30 மணிக்கு கோவை 6வது குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை அளித்துள்ளது.
முன்னதாக கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சோலார் பேனல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் உள்ளிட்டோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் குற்றம் சாட்டினார். இவ்வழக்கு கேரளாவில் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கோவை மாஜிஸ்திரேட் 6-வது கோர்ட்டில் நடைபெற்று வந்த காற்றாலை மற்றும் சோலார் பேனல் மோசடி வழக்கில் 3 வருட சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.