‘இது அவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்’.. முடியை தானம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்.. நெகிழ வைத்த காரணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் புற்றுநோயாளிகளுக்கு உதவுவதற்காக முடிகளை தானம் செய்தனர்.

கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் புற்றுநோயளிகளுக்கு ‘விக்’ செய்வதற்காக முடி தானம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு முடிதானம் செய்தனர். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர் அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
புற்றுநோய் சிகிச்சையின்போது முடி உதிர்தல் இயல்பாக நிகழும் என்றாலும், இது நோயாளிகளின் மனநிலையை பாதிக்கும். இதனால் தானமாக பெறப்படும் முடியைக் கொண்டு விக் தயார் செய்து அதை குறைவான விலையில் புற்றுநோயாளிகளுக்கு கொடுக்கும்போது அது பயனுள்ளதாக அமையும்.
முடிதானம் அளிக்கும்போது மாணவிகளிடம் இருந்து 10 அங்குலம் மட்டுமே முடி தானமாக வெட்டி எடுக்கப்படும் என தெரிவிக்கின்றனர். புற்றுநோயாளிகளுக்கு பயனளிக்கும் என்பதாலே முடியை தானமாக கொடுக்க முன்வந்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஏராளமான மாணவிகள் கலந்துகொண்டனர். மொத்தமாக மாணவிகள், பேராசியைகள், ஊழியர்கள் என 100 பேர் முடி தானம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
