‘சரியா படிக்கலன்னு திட்டிய பெற்றோர்?’.. ‘காஞ்சிபுரம் பல்கலைக் கழக’ மாணவியின் சோக முடிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பயோ டெக்னாலஹி 2-ஆம் ஆண்டு படித்து வந்த 19-20 வயது மதிக்கத்தக்க இளம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது.

ஆயிஷி ராணா என்கிற பெயருடைய பஞ்சாபை சேர்ந்த இம்மாணவி சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர்கள் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும், அதனால் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஆயிஷி ராணா, தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதை பார்த்ததும் மாணவிகள் பதறியபடி போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, விரைந்து வந்த மறைமலை நகர் போலீஸார் இறந்து போன மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : #COLLEGESTUDENTS #GIRL
