“போன்ல இந்த மாதிரி விஷயங்கள எல்லாம் பேசிக்காதீங்க..”.. முன்னாள் ஐ.ஜி விடுத்த வேண்டுகோள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நேரில் பேசுவதற்கு சங்கோஜப்படும் விஷயங்களை போனில் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று காவல்துறை முன்னாள் ஐ.ஜி கலியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைக்குடி அருகே உள்ளது அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லூரி. இங்கு 1992-1995 ஆம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக காவல்துறை முன்னாள் ஐஜி கலியமூர்த்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, நேரில் பேசுவதற்கு தயங்கும் விஷயத்தை, செல்போனில் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, புள்ளிவிவரப்படி 67% மாணவர்களும் 31% மாணவிகளும், ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்கிற தகவலையும் தெரிவித்தார்.
Tags : #SMARTPHONE #PHONETALK
