'ஓடும் காரில் வைத்து ஒரு மணி நேரம்..'.. இரவுப்பணி முடிந்து திரும்பிய சிறுவனுக்கு 6 இளைஞர்களால் நேர்ந்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Oct 31, 2019 07:47 PM

கொல்கத்தாவின் கித்தப்பூர் அருகே 17 வயது சிறுவனுக்கு 6 இளைஞர்களால் ஓடும் காரில் நேர்ந்த பாலியல் சீண்டல் சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

minor boy allegedly sodomised in a moving car by 6 men

கொல்கத்தாவில் கடந்த திங்கள் கிழமை அன்று இரவு நேரப் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 17 வயது சிறுவனை, 6 இளைஞர்கள் சேர்ந்து, கடத்தி, ஓடும் காரில் தகாத முறையில் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் அவர்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துள்ளான் சிறுவன்.

அதன் பின்னர் சிறுவனை அந்த இளைஞர் கும்பல் வெளியில் தூக்கி வீசியதை அடுத்து சிறுவனை பரிசோதித்த நர்ஸிங் ஹோம் ஊழியர்கள் ஆங்காங்கே உடலில் இருந்த கீறல்களைப் பார்த்து அலறியுள்ளனர். இதுபற்றி பேசிய காவல்துறை, அந்த இளைஞர் கும்பல் சிறுவனிடம் இருந்து 17 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சில்வர் செயினையும் அபகரித்ததோடு, வன்கொடுமை செய்தும் தூக்கி வீசியதாக குறிப்பிட்டுள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் 6 குற்றவாளிகளில் முக்கியக் குற்றவாளி ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : #SEXUALABUSE #POLICE #YOUNGSTER #MINORBOY #KOLKATA