‘கோயிலுக்கு போனபோது’... ‘லாரி மீது மோதி, உருக்குலைந்த புதிய டாடா ஏஸ்’... ‘அலறிய சிறுவர்கள்’... ‘14 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 13, 2019 08:01 PM

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே, லா.கூடலூரைச் சேர்ந்த 14 பேர், ராவுத்தநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு, டாடா ஏஸ் என்ற சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். புதிதாக வாங்கிய அந்த சரக்கு ஆட்டோவுக்கு, பூஜைப் போடுவதற்காக, உள்ளூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான சிறுவர்களை, ஓட்டுநர் அழைத்துக் கொண்டு சென்றதாகத் தெரிகிறது. .

lpg cylinder lorry and tata ace got accident in villupuram

கடம்பூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, வளைந்து நெளிந்து சென்ற சாலையில், வலதுபுறமாக ஏறிய சரக்கு ஆட்டோ, திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிரே வந்த சமையல் எரிவாயு ஏற்றிச் செல்லும் லாரி மீது, நேருக்கு நேர் சரக்கு ஆட்டோ மோதியது. இதில் சரக்கு ஆட்டோ உருக்குலைந்து போனது. சரக்கு ஆட்டோவில் இருந்த சிறுவர்கள் அலறித்துடித்தனர். இதில், மகாலட்சுமி (16), பொன்மலை செல்வன் (13), தமிழரசன் (17) ஆகிய மூன்று சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த காயத்தால், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 5 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிவேகத்தில் சரக்கு ஆட்டோ சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #VILLUPURAM #STUDENTS #DIED