'தூக்கி'யடித்த கார்.. அந்தரத்தில் 'பறந்து' கீழே விழுந்து.. சட்டென 'நடந்து' சென்ற வாலிபர்..வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்

By Manjula | Oct 13, 2019 05:42 PM

சாலையில் எங்காவது விபத்துக்களை பார்த்தால் கூட, அந்த கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் நாம் உறைந்து போய் விடுவோம். இதுவே நாம் விபத்தில் சிக்கினால் அது லேசான சிராய்ப்பாக இருந்தாலும் கூட மாசக்கணக்கில் அது பற்றியே யோசித்துக்கொண்டு இருப்போம்.

 

Watch Video: young man met an accident but he walked normal

ஆனால் இந்த வீடியோவில் ரோட்டில் மொபைல் பேசிக்கொண்டு செல்லும் வாலிபர் ஒருவரை கார் ஒன்று மோத, ரோட்டில் உருண்டு கீழே விழுகிறார். ஆனால் எதுவுமே நடக்காதது போல எழுந்து அவர் பாட்டில் வேகமாக செல்கிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் அவர் என்ன மனிதன் தானா? எதுவுமே நடக்காதது போல அவர் பாட்டுக்கு நடந்து செல்கிறாரே? என கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.

Tags : #ACCIDENT