கணவரை 'வெளிநாட்டுக்கு' விமானம் ஏற்றிவிட்டு திரும்பியபோது.. நடந்த விபரீதம்.. மனைவி உட்பட மூவர் பலி.. 4 பேர் படுகாயம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Oct 11, 2019 11:42 AM

வெளிநாடு சென்ற கணவரை விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பியபோது நடந்த விபத்தில் மனைவி அவரது அம்மா-அப்பா  உட்பட மூவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Car-Lorry accident in Seerkazhi, same family members died

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று வேலைக்காக துபாய் நாட்டுக்கு விமானத்தில் சென்றார். சென்னை விமான நிலையத்தில் இவரை வழி அனுப்பிவிட்டு நேற்றிரவு சொந்த காரில் அவரது மனைவி சுபத்ரா(38), சுபத்ராவின் அம்மா சாந்தி(50), சுபத்ராவின் மகன் புவனேஸ்வரன்(14), மகள் சாய்ஸ்ரீ(8) அப்பா சோமசுந்தரம்  (68) ஆகியோர் ஊருக்கு திரும்பி வந்துள்ளனர்.

நள்ளிரவு 2 மணியளவில் சீர்காழியை அடுத்த கோவில்பத்து சந்திப்பில் இவர்களது கார் மீது எதிரே வந்த பால் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் மனைவி சுபத்ரா , சுபத்ராவின் அம்மா-அப்பா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மகன் புவனேஸ்வரன், மகள் சாய்ஸ்ரீ  உட்பட மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #ACCIDENT