‘அதிவேகத்தில், பேருந்தை முந்தமுயன்று’... ‘தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து’... ‘அலறித்துடித்த பயணிகள்’... ‘தலைக்கீழாக கவிழ்ந்து நடந்த விபத்து’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 14, 2019 11:58 AM

சொகுசுப் பேருந்து ஒன்று தாறுமாறாக மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

salem to bangalore private omni bus got accident no casualties

தனியார் நிறுவன சொகுசுப் பேருந்து ஒன்று, சேலம் செல்வதற்காக, பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. படுக்கை வசதிகள் கொண்ட அந்த சொகுசுப் பேருந்து, தொப்பூர் டோல்கேட்டை நெருங்கிக் கொண்டிருந்தநிலையில், திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைநத்னர். சாலை மற்றும் சாலையோரம் என அந்தப் பேருந்து மாறிமாறிச் சென்று வந்தநிலையில், பேருந்துக்கு பின்னால் சென்றவர்கள், ஹாரன் அடித்துக்கொண்டே சென்றனர்.

ஆனால் பேருந்து ஓட்டுனரோ, அவர்களுக்கு வழிவிடாமல், அதிவேகமாக, சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஓட்டுநர் முன்னால் சென்ற இன்னொரு தனியார் சொகுசுப் பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அப்போது சாலையின் குறுக்கே, இரும்பு பேரிகார்டை தள்ளிக் கொண்டு தடுப்பில் மோதியப் பேருந்து, அப்படியே கவிழ்ந்தது.

பேருந்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள், அலறி அடித்துக் கொண்டு முன்பக்க கண்ணாடி வழியாக எகிறி குதித்து வெளியே வந்தனர். பின்னர் பயணிகள் சிலர், ஓட்டுநரை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். குடி போதையில், ஓட்டுநர் சொகுசுப் பேருந்தை அதிவேகமாக இயக்கியதே விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.

Tags : #ACCIDENT #SALEM #BANGALORE #OMNI #BUS