'சமைச்சிக்கிட்டு இருந்தாங்க'...'திடீர்னு அலறல் சத்தம் கேட்டுச்சு'... '11 பேரை காவு வாங்கிய கோரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 14, 2019 10:15 AM

சமைத்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 people were killed on Monday due to a gas cylinder explosion in UP

உத்தர பிரதேச மாநிலம் வாலித்பூர் பகுதியில் உள்ள வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.  இந்த கோர விபத்தில் வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு  உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : #UTTARPRADESH #ACCIDENT #GAS CYLINDER BLAST