‘மரத்தில் மோதி நொறுங்கிய கார்’.. போட்டியில் விளையாட போன 4 ஹாக்கி வீரர்கள் உடல் நசுங்கி பலி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 14, 2019 11:24 AM

கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 ஹாக்கி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 hockey players killed after car rams into tree in MP

மத்திய பிரதேசம் மாநிலம் ஹோசன்காபத் நகரில் தியான் சந்திரா டிராபி என்ற ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இடார்சி என்ற பகுதியில் இருந்து ஹாக்கி வீரர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது ரைசல்பூர் என்ற பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலு  3 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் விளையாடுபவரக்ள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags : #ACCIDENT #HOCKEY #PLAYERS #KILLED #CAR #HOSHANGABAD #MADHYAPRADESH