‘பேருந்து கவிழ்ந்து’.. ‘நொடியில் நடந்த கோர விபத்தில்’.. ‘14 பேர் பலி; 98 பேர் பலத்த காயம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 12, 2019 04:59 PM

நேபாளத்தில் பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 98 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

14 Killed 98 Injured As Overcrowded Bus Meets Accident In Nepal

நேபாளத்தில் சிந்துபால்சாக் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் பலத்த காயமடைந்த  98 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்றதே பேருந்து விபத்திற்கான காரணம் என அதிகாரிகள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. மேலும் பேருந்தின் டயரும் பஞ்சரானதாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோசமான சாலை காரணமாக கடந்த சில வருடங்களாகவே அங்கு விபத்துக்கள் அதிகரித்து வருவதை நேபாள அரசு கவனத்தில் கொள்ள  வேண்டும் எனவும் குரல்கள் வலுத்து வருகிறது.

Tags : #NEPAL #BUS #ACCIDENT #CROWDED #DEAD #INJURED