'அடுத்த 2 நாட்கள்'... '9 மாவட்டங்களில் மழை'... 'வானிலை மையம் தகவல்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Nov 21, 2019 02:22 PM
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு, கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தமிழக கடலோரம் மற்றும் வட மாவட்டங்களை ஒட்டிய வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனன் காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
குமரி, ராமேஸ்வரம், கடலூர் ஆகிய பகுதிகளில் 50 கிமீ வேகத்திற்கும் அதிகமாக காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காணப்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் கூறப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பிறகு மழை குறைந்து, 28-ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1 முதல் இப்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் 31 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்க வேண்டியநிலையில், குறைந்த மழை மட்டுமே பதிவாகியுள்ளது.