'தமிழக மக்கள் 100% இதை செய்வார்கள்'... ‘ 'நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதில்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Nov 21, 2019 06:17 PM

கோவாவிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

rajinikanth speaks about 2021 tamil nadu assembly election

கோவாவில் நடைப்பெற்ற 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதையடுத்து, இன்று சென்னை திரும்பினார். பின்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள் தான். இந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்பிக்கிறேன்’ என்றார். கமலும் நீங்களும் இணைந்து கூட்டணி வைத்தால், யார் முதல்வர் வேட்பாளராக இருப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘தேர்தல் நடக்கும் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பின் அனைவருடன் ஆலோசித்து அதுக்குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை அதைப்பற்றி பேச விரும்பவில்லை’ என்றார். திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி ‘வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்’ என்றார்.

Tags : #RAJINIKANTH #CHENNAI #JAYAKUMAR #POLITICS